யாரை நையாண்டி செய்கிறார்? ஏதோ படப்பிடிப்பு போல நடந்திருக்கும் மாநாடு - விஜயை வறுத்தெடுத்த திருமா!

Thirumavalavan Against Vijay : நேற்று நடந்த தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் தளபதி விஜய் பேசிய கருத்துக்களுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் தொல் திருமாவளவன்.

VCK leader thol thirumavalavan heated tweet about thalapathy vijay ans

தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்று முடிந்தது. பல லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய இந்த மாநாட்டில், தளபதி விஜய் பேசிய விஷயங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம். தமிழிசை சௌந்தர்ராஜன், ராதிகா சரத்குமார் போன்ற அரசியல் தலைவர்கள் தளபதி விஜயின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மிகப்பெரிய அளவில் தளபதி விஜயை எதிர்த்து விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். 

நேற்று நடந்த அரசியல் மாநாடு ஏதோ திரைப்பட படப்பிடிப்பு போல் நடந்து முடிந்திருப்பதாக கடும் விமர்சனத்தை அவர் முன்வைத்திருக்கிறார். இது குறித்து ஒரு பதிவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் தொல் திருமாவளவன். "விஜய் தன்னுடைய கட்சி ஆளுங்கட்ச்சியாக மாற வேண்டும் என்று ஆசைப்படுவது அவருக்கான சுதந்திரம், அவரிடம் இருக்கும் நம்பிக்கை. ஆனால் ஒரு அரசியல் தலைவராக நடக்கும் பரிணாமத்தில், பல்வேறு நிலை மாற்றங்களை கடந்த பின்னரே உச்சகட்ட மாற்றத்தை எட்ட முடியும்". 

த.வெ.க; மாநாட்டுக்கு வரும் வழியில் இறந்த தொண்டர்கள் - எதிர்ப்புக்கு பின் வந்த விஜயின் இரங்கல்!

"இது தவிர்க்க முடியாத அறிவியல் உண்மை ஆனால் முதலில் மாநாடு, அடுத்தது ஆட்சி பீடம் என்பதாக அதீத வேட்கையில் அசுர வேகத்தை கொண்டுள்ளதாக இருக்கிறது விஜயின் பேச்சு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று வள்ளுவர் பெருமானின் சமத்துவ கோட்பாட்டை முதன்மை கொள்கையாக உயர்த்தி பிடிக்கும் விஜய், பெருபான்மை, சிறுபான்மை எனும் பெயரிலான பிளவுவாதத்தை ஏற்பதில்லை என்று கூறுகிறார். ஆனால் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை". 

"பாசிசம் குறித்து விஜய் பேசி இருக்கிறார், ஆனால் அங்கு நடப்பது பாசிசம் என்றால் இங்கு நடப்பது பாயாசமா என்று கேட்டு கிண்டலாக பேசியிருக்கும் அவர், யாரை கிண்டலடித்து பேசுகிறார் என்று தெரியவில்லை. அவர் திமுகவை கூறுகிறாரா? காங்கிரசை கூறுகிறாரா? இடதுசாரி கட்சிகளைப் பற்றி பேசுகிறாரா? அல்லது புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியாரின் இயக்கங்களை பற்றி பேசுகிறாரா? யாரை கிண்டலடித்து பேசுகிறார் என்பதே தெரியவில்லை". 

"அதேபோல கூட்டணியில் தங்களுடன் இணைய வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்கின்ற ஒரு புதிய நிலைபாட்டை தமிழக அரசியல் களத்தில் முதல் முறையாக தளபதி விஜய் முன்மொழிந்திருக்கிறார். மேலும் அவர் எதிர்பார்த்த விளைவுகளை இந்த விஷயம் ஏற்படுத்துமா என்பதும் தெரியவில்லை. குடும்ப அரசியல் எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு போன்றவை தமிழக அரசியலை பொறுத்தவரை பழைய முழக்கங்களே. ஏதோ பண்டிகை காலத்தில் தள்ளுபடி விற்பனை போல,ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று ஒரு புதிய அரசியல் யுக்தியை அவர் வெளிப்படுத்தி உள்ளது அதிமுகவுக்கு முன் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்கின்ற அவசரகதியில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறாரோ என்று தான் தோன்ற வைக்கிறது". 

"உண்மையில் விஜய் நேற்று பேசிய இந்த மாநாடு பல லட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த மற்றொரு படப்பிடிப்பு போல தான் இருக்கிறது" என்று கூறி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். 

"இப்படி ஒரு விஜயை நான் பார்த்ததே இல்லை" த.வெ.க தலைவரை சரமாரியாக புகழ்ந்த ராதிகா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios