Asianet News TamilAsianet News Tamil

படிக்க "காசு" இல்லாமல் தவிக்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் வாரிசு..!

va.vu.si relation have no money to continue higher education
va.vu.si relation have no money to continue higher education
Author
First Published May 18, 2018, 4:20 PM IST


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் வாரிசு முத்து பிரம்ம நாயகி, தற்போது  உயர் கல்விக்காக உதவியை எதிர்பார்த்துக்  காத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு  தள்ளப்பட்டு  உள்ளார்.

வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார்.

பின்னர்  வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.இந்நிலையில் இவருடைய தலைமுறையில் வந்த மாணவி முத்து பிரம்ம நாயகி, நடந்து முடிந்த 12 ஆம்  வகுப்பு  தேர்வில்  நல்ல  மதிப்பெண் பெற்று,  என்ஜினியர் படிப்பை  பயில  ஆசைபடுகிறார்.

 ஆனால் அவருக்கு, போதிய பணம் இல்லாமல்  மிகவும் சிரமப் பட்டு வருகிறார்.நாடுக்க  போராடிய  வ.உ.சி. வழி வந்த  இந்த   மாணவிக்கு  உதவ  யார் வருவார்கள் என்ற  கேள்வி எழுந்துள்ளது.

அவரது தந்தை தினக்கூலி வேலை செய்யும் ஏழை. பொறியியல் படிப்பு படிக்க ஆசைபடும் இவரது தகுதி மதிப்பெண் 1,130 / 1,200 என்பது  குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios