- Home
- Tamil Nadu News
- ஈரோடு
- ஈரோட்டில் விஜய்! டிச.16ல் கொங்கு மண்டலம் குலுங்கப் போகுது! செங்ஸ் போட்ட பிளான்
ஈரோட்டில் விஜய்! டிச.16ல் கொங்கு மண்டலம் குலுங்கப் போகுது! செங்ஸ் போட்ட பிளான்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்கு பெரும் பலம் கிடைத்துள்ளது. கொங்கு மண்டலத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் விஜய் கலந்து கொள்ள உள்ளார்.

விஜய் ஈரோடு கூட்டம்
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கள் பிரசாரத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பொதுமக்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள புதிய சக்தி என்பது தமிழக வெற்றிக் கழகமே. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, தற்போது மாநில அரசியலில் முக்கியமான பங்கு வகிக்கும் நிலைக்கு வந்துள்ளது.
தவெக தேர்தல் பிரசாரம்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாகவே வேகமாக அரசியல் அரங்கில் செயல்பட்டு வருகிறார். கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவத்திற்குப் பிறகு சுமார் ஒரு மாதத்திற்கு கட்சியின் செயல்பாடுகள் மந்தமடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் முழுத் திறனுடன் செயல்பட தொடங்கியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கும் குறைவாக உள்ள நிலையில், கட்சியின் அடித்தளப் பணிகள் அனைத்தும் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.
செங்கோட்டையனின் புது திட்டம்
இந்த அரசியல் சூழலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தவெக-வில் இணைவு. அவரின் அரசியல் அனுபவமும், ஆதரவாளர்களின் வலிமையும் விஜய்க்கு மிகப் பெரிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. செங்கோட்டையன் இணைந்த பின், தவெக அமைப்பு மாவட்ட அளவில் இன்னும் செயல்பாடுகளை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொங்கு மண்டலத்தில் கால் பதிக்கும் விஜய்
வரும் டிசம்பர் 16ஆம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிக்காக செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அதிகாரப்பூர்வ மனு சமர்ப்பித்திருந்தார். இந்த நிலையில் செங்கோட்டையன் இதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். கூட்டத்தில் சுமார் 25,000 பேர் பங்கேற்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் 16ஆம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்.
25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்
இந்த நிகழ்விற்கான இடத்தைத் தேர்வு செய்ய, தவெக நிர்வாக குழுவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் மங்கலம் பகுதியை நேரில் ஆய்வு செய்துள்ளனர். மக்கள் கூடும் வசதியையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விஜயின் அடுத்த முக்கிய மக்கள் சந்திப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியில், சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

