காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கீழ்பஜார், ஆவணிபூர், வடஆலம்பாக்கம், கட்டளை, நரைமாங்கனி, பாங்கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.

அந்த பெண்களை வேனில் ஏற்றிக்கொண்டு திருக்கழுகுன்றத்தை அடுத்த வள்ளிபுரத்தை சேர்ந்த ராஜா (25) செவ்வாய்க்கிழமை காலை வந்து கொண்டிருந்தார். வேன் மேல்மருவத்தூரை அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில் வந்தபோது நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வேனில் வந்த சர்மிளா (20), சுதி (21), பவித்ரா (21), சுகுணா (19), சசிகலா (19), கிரிஜா (21), தீபசங்கரி (19), மகிதா (19), கவுதமி, வேன் டிரைவர் ராஜா உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மேல்மருவத்தூர் சப்–இன்ஸ்பெக்டர் பத்மாவதி அவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, படாளம் மற்றும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தார்.