vaithiyalingam is the main person for biggest raise on behalf oh sasikala
வைத்தியலிங்கம் மீது விவேக்கின் நண்பர் குற்றசாட்டு
முக்கிய பிரமுகர் தந்த பட்டியல் படிதான் வருவான வருமானவரித்துறை சோதனை நடத்தியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது
கடந்த 9 ஆம் தேதி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் என பலரையும் குறி வைத்து வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்
அதில் குறிப்பாக 2000 அதிகாரிகள் 200 வாகங்கள்.180 இடங்கள் என பட்டியல் நீளும்.. இதில் என்ன ஒரு அழகு என்றால், ஒரே நேரத்தில் தான் அனைத்து இடங்களிலும் இந்த சோதனை நடந்தது
சரி...இந்தியாவிலேயே இப்படி ஒரு சோதனை நடைபெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய மாபெரும் சிறப்பு வாய்ந்த சோதனைக்கு உட்பட்டவங்க யாரு....சசிகலா தினகரன்,விவேக்,இவர்களின் நண்பர்கள் உறவினர்கள் கட்சி பிரமுகர் என அனைவரும் அடங்குவர்
இந்நிலையில் எப்படி இந்த சோதனைக்கு திட்டம் போடப்பட்டிருக்கிறது தெரியுமா ?
அதாவது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தூண்டுதலின் பேரில்,தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைத்தியலிங்கம் தான் எங்கெல்லாம் சோதனை செய்யலாம் என்ற பட்டியலை தயார் செய்து மேலிடத்திற்கு அனுப்பி வைத்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.இந்த தகவலை விவேக்கின் நண்பர் இரா,சரவணன் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்
அப்படியென்றால், வைத்தியலிங்கத்திற்கு சசிகலாவின் முழு சொத்து விவரம் தெரிந்திருக்கும் என்றே பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்
அதாவது இப்படிப்பட்ட வருமானவரி சோதனைக்கு பின்னணியில் யார் தான் துல்லியமாக செயல்படுகிறார்களோ என நினைக்க வைத்த இந்த தருணத்தில் தற்போது வெளிவந்துள்ள இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் ஒரு மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்
இதற்கு முன்னதாக எடப்பாடி தான் இந்த பட்டியலை வருமானவரிதுரையினருக்கு அளித்ததாக தகவல் வெளியாகி இருந்தது ...
இந்நிலையில் முக்கிய பிரமுகரான வைத்தியலிங்கம் தான் வருமானவரித்துறையினருக்கு இந்த பட்டியலை அனுப்பி அனுப்பி வைத்துள்ளதாக விவேக்கின் நண்பர் இரா.சரவணன் தெரிவித்து உள்ளார்
