இலங்கைக்கு ஏற்பட்ட நிலையை இந்தியாவிற்கு வராமல் தடுத்தவர் ப.சிதம்பரம்..! கவிஞர் வைரமுத்து பேச்சால் பரபரப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக இலங்கையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் பொருளாதாரம்  சரியாமல் இருப்பதற்கு ப.சிதம்பரம் தான் முக்கிய காரணம் என   கவிஞர் வைரமுத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Vairamuthu said that it was P  chidambaram who prevented the economic damage that occurred in Sri Lanka from happening in India

வைரமுத்துவிற்கு பொன்விழா

இலங்கையில் பொருளாதார  பாதிப்பு காரணமாக அதிபர், பிரதமர் பதவியில் இருந்து தப்பித்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் உள்ளனர். தமிழகத்தை நோக்கி அகதிகளாக வரும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதற்க்கு முக்கிய காரணமாக இருப்பது கொரனா பாதிப்பு என்றே கூறப்படுகிறது. இலங்கை சுற்றுலாவையே அதிகளவு நம்பியுள்ளது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலா முற்றிலுமாக முடங்கியுள்ளது.  இந்தநிலையில் இலங்கைக்கு ஏற்பட்ட  நிலை போன்று இந்தியாவிற்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுத்தவர் ப.சிதம்பரம் என கவிஞர் வைரமுத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவையில் கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கிய பொன்விழா மற்றும் பிறந்தநாள் விழா நடைபெற்றது. 

கருணாநிதிக்கு நன்றி தெரிவித்த குஷ்பு... என்ன காரணம் தெரியுமா?

பொன்னையன் ஆடியோ போல் விரைவில் பல ஆடியோக்கள் வெளிவரும்..! எடப்பாடி பழனிசாமியை அலற வைத்த புகழேந்தி

Vairamuthu said that it was P  chidambaram who prevented the economic damage that occurred in Sri Lanka from happening in India

பொருளாதார பாதிப்பை தடுத்தவர் வைரமுத்து

 இந்த விழாவில் கவிஞர்  வைரமுத்து பேசியபோது, இந்தியாவின் பொருளாதாரம் கொரோனாவிற்கு பின்பும் சரியாமல் இருப்பதற்கும்,  இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிற்கு வராமல் இருக்கவும் காரணம் ப.சிதம்பரம் தான் என தெரிவித்தார். சிதம்பரத்தின் பேனாவும், நாக்கும் என்ன சொல்கின்றது என்பதை கேட்க இந்திய நாடு காத்திருக்கின்றது என தெரிவித்தார். திறந்த வெளி வாழ்க்கையில் இருந்து வந்த எனக்கு பேராசிரியராக இருப்பவர் ப.சிதம்பரம் எனக்கூறிய அவர், கலைஞர் பொன்விழாவிற்கு தலைமை ஏற்பார் என நினைத்த நேரத்தில், அவர் இல்லாத இடத்தை மேடையில் இருப்பவர்கள் பூர்த்தி செய்து இருப்பதாக தெரிவித்தார். கொரோனா பாதிப்பிலும் பொருளாதார பாதிப்பை சரி செய்தவர் பா.சிதம்பரம் என கவிஞர் வைரமுத்து கூறிய கருத்தை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

அதிமுக அலுவலகம் யாருக்கு..! மல்லு கட்டும் ஓபிஎஸ் - இபிஎஸ்... நீதிமன்றத்தில் இன்று விசாரணை


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios