vaikundarajan vv minerals godowns sealed

தூத்துக்குடியில் விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேர் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வைகுண்டராஜனுக்குச் சொந்தமான விவி மினரல்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாக தாது மணல் எடுப்பதாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சில இடங்களில் அந்நிறுவனம் அனுமதியின்றி மணல் எடுத்திருப்பது தெரியவந்தது.இது தொடர்பான விசாரணையும் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, வெளிநாட்டிற்கு 420 தாதுமணலை ஏற்றுமதி செய்ததாக விவி மினரல்ஸ் நிறுவனம் மீது புதிதாக வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் அந்நிறுவத்திற்குச் சொந்தமான 14 குடோன்களுக்கு மாவட்ட ஆட்சியர் கருணாநகரன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

இக்குடோன்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சுமார் 25 ஆயிரம் டன் தாது மணல் குவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விவி மினரல்ஸ் குடோன்களுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்திருப்பது வைகுண்டராஜனுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளதாம்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தும் ஏன் இந்நடவடிக்கை பாய்ந்தது என்ற குழப்பத்தில் வைகுண்டராஜன் குமுறிவருவதாகவும் கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்....