Asianet News TamilAsianet News Tamil

தன்னை முட்டாள் என்று விமர்சித்த அப்துல்கலாமின் உதவியாளரை பொறிந்து தள்ளினார் வைகோ...

vaiko is a fool who criticized by Abdul kalam assistant was get answer from vaiko
vaiko is a fool who criticized by Abdul kalam assistant was get answer from vaiko
Author
First Published Apr 7, 2018, 11:29 AM IST


தேனி
 
வைகோ ஒரு முட்டாள் என்றும், ஒரு உயிரை பலி வாங்கிவிட்டார் என்றும் கடுமையாக விமர்சித்த அப்துல்கலாமின் உதவியாளரான பொன்ராஜூக்கு, வைகோ பதிலடி தந்துள்ளார்.

தேனி மாவட்டம், போடி அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 31-ஆம் தேதி மதுரையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டார். 

நேற்று காலையில் போடியில் இருந்து நடைபயணத்தை தொடங்கி தேவாரம் பிரதான சாலை, பி.ரெங்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை வழியாக ராசிங்காபுரம் சென்றார். 

அங்கு மதிய உணவு சாப்பிட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோணாம்பட்டி விலக்கு, திம்மிநாயக்கன்பட்டி, பொட்டிப்புரம், ராமகிருஷ்ணாபுரம் வழியாக டி.புதுக்கோட்டை கிராமத்துக்கு சென்றார். அங்கு இரவு தங்கினார். 

சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், பொட்டிப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மத்தியில் வைகோ பேசினார். அப்போது அவர், "நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் குறித்து நான் பல விஞ்ஞானிகளிடம் கலந்து பேசினேன். 

குறிப்பாக அணுசக்தி துறை விஞ்ஞானியான கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பத்மநாபனிடம் முழு விவரம் சேகரித்து 10 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த திட்டம் அழிவை தரும் என்று அறிக்கை கொடுத்தேன். 

ஆனால், அப்துல்கலாமின் உதவியாளர் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொன்ராஜ் ஒரு பதிவை போட்டுள்ளார். வைகோ ஒரு முட்டாள் என்றும், ஒரு உயிரை பலி வாங்கிவிட்டார் என்றும் சொன்னது மட்டுமல்லாமல், நியூட்ரான் குண்டுவுக்கும், நியூட்ரினோவுக்கும் வித்தியாசம் தெரியாதவர் என்று கடுமையாக பதிவிட்டுள்ளார். 

நான் விஞ்ஞானி இல்லை. ஆனால், விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்து, என்னை வருத்திக் கொண்டு போராடுகிறேன். பொன்ராஜ், அப்துல்கலாமுக்கு உதவியாளர் என்று சொல்லிக் கொள்கிறார். சீமைக் கருவேல மரங்களை அகற்ற நான் போராடியபோது, சீமைக் கருவேல மரங்களை ஆதரித்து அறிக்கைவிட்டார். 

கூடங்குளம் அணு உலையையும், ஸ்டெர்லைட்டையும் ஆதரித்து அறிக்கைவிட்டார்.  இப்போது ஊரை ஏமாற்ற ஹைட்ரோ கார்பனை மட்டும் எதிர்க்கிறார். எந்தக் கூட்டத்துக்கு செல்லும் முன்பும், அதுகுறித்து முழுமையாக நான் படித்துவிட்டுதான் செல்வேன்.

நான் விவரம் தெரியாமல் எதிர்க்கிறேன் என்று கூறுகிறாரே, கம்யூனிஸ்டு கட்சியின் தலைசிறந்த தலைவர் அச்சுதானந்தன் எதிர்க்கிறார். உம்மன்சாண்டி எதிர்க்கிறார். அவர்களும் விவரம் தெரியாமல் தான் எதிர்க்கிறார்களா? 

நியூட்ரினோ திட்டம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜனிடமோ, மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடமோ வாக்குவாதம் செய்வதற்கு பொன்ராஜ் தயாரா? என்று வைகோ பேசினார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios