Amit Shah in Chennai மருத்துவக் கல்வியை தமிழ் மொழியில் கொண்டுவாருங்கள்:முக ஸ்டாலினுக்கு அமித் ஷா வலியுறுத்தல்

பல மாநிலங்கள் மருத்துவம் மற்றும் பொறியில் படிப்பை பிராந்திய மொழியில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கிவிட்டன. ஆதலால் தமிழக முதல்வரும் தமிழ்மொழியில் கொண்டுவருவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Union Minister Amit Shah urges Tamil Nadu Chief Minister to offer technical and medical education in Tamil.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டு விழா இன்று சென்னையில் நடக்கிறது, பாஜக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பதால் அதில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தார். அவருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் நேரில் வரவேற்றனர். 

Union Minister Amit Shah urges Tamil Nadu Chief Minister to offer technical and medical education in Tamil.

சென்னை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று பங்கேற்றார். வாலஜா சாலையில் அமித் ஷா வாகனம் வந்தபோது சாலையின் இருபுறங்களிலும் பாஜக தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

இந்தியா சிமெண்ட்ஸ் பவளவிழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்தியஅமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

அரசியல் நிலைத்தன்மை மற்றும் ஊழல் இல்லாத ஆட்சி, நிர்வாகம் காரணமாக, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. சர்வதேச செலாவணி நிதியம், இந்தியாவின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளது. உலகளவில் பொருளாதாரம் இருள் சூழ்ந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதாரம் ஒளியாக தெரிகிறது என்றது. 

Union Minister Amit Shah urges Tamil Nadu Chief Minister to offer technical and medical education in Tamil.

ஜி20 நாடுகளில் இந்தியா 2வது இடத்தை எட்டும்,  2022-23ம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.8 சதவீதம் வளர்ச்சி அடையும்  எனக் கணத்துள்ளது. 2023-24ம் ஆண்டில்,  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1சதவீதமாக உயர்ந்து,  முதலிடத்தைப் பிடிக்கும் என்று கணித்துள்ளது.

மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் சமீபத்திய கணிப்பில், 2027ம் ஆண்டில் உலகிலேயே 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் எனக் கணித்துள்ளது. இதற்கு உள்கட்டமைப்பு வசதி முக்கியம். திறன்மிக்க, வெளிப்படையான கொள்கைகளால் மோடி அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு பல்வேறு துறைகளில் ஏராளமானவற்றைச் சாதித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் தேசத்தின் மேம்பாட்டிலும் பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்த பணியை நாம் செய்துள்ளோம். 2025ம் ஆண்டில் இந்தியா நிச்சயமாக 5 லட்சம் கோடி டாலர் கொண்ட பொருளாதாரமாக மாறும். 

தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். மருத்துவம் மற்றும் தொழில்பிரிவுக் கல்வியை தாய்மொழியில் மாற்றும் பணியை,கற்பிக்கும் பணியை பலமாநிலங்கள் தொடங்கிவிட்டன. ஆதலால், தமிழக அரசும், முதல்வரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, தமிழ்மொழியில் கற்பிக்க வேண்டும். தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் எளிதில் மருத்துவ அறிவியலை, தொழில்நுட்ப கல்வியையும் புரிந்து கொள்ள முடியும், ஆய்வுகளில் ஈடுபட்டு, மருத்துவ அறிவியலுக்கு பங்களிப்பு செய்ய முடியும்

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios