Asianet News TamilAsianet News Tamil

Amit Shah : திட்டமிட்டு ரத்தான பயணம்.. மோடியை தொடர்ந்து தமிழகம் வருகிறார் அமித்ஷா - எங்கே? எப்போது?

BJP Leader Amit Shah : பிரதமர் மோடியை தொடர்ந்து பாஜக தலைவர் அமித்ஷா அவர்களும் விரைவில் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Union Home Minister and BJP leader Amit shah visiting tamil nadu on may 30 schedule released ans
Author
First Published May 28, 2024, 11:59 PM IST

மோடி தமிழகம் வருகை 

பொதுவாக மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டும் பொழுது பிரதமர் மோடி ஆன்மீக பயணம் மேற்கொள்வது வழக்கமான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின் போது அவர் இமயமலையில் ஒரு குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டார். இந்த சூழலில் இந்த முறை லோக்சபா தேர்தல் முடிவடைய உள்ள இந்த நேரத்தில் வரும் மே 30ம் தேதி அவர் தமிழகம் வருகிறார். 

மே மாதம் 30ம் தேதி திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். அதன் பிறகு தியானத்தை முடித்துவிட்டு மீண்டும் ஜூன் மாதம் முதல் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். 

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நரேந்திர மோடி தியானம் மேற்கொள்ள காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

அமித்ஷா தமிழகம் வருகை 

அதேபோல மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுவாமி தரிசனம் செய்வது மழையால் தடைபட்ட நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மே 30ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்பு திட்டமிட்டபடி புதுக்கோட்டை அருகே உள்ள திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. 

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் மாதம் 1ம் தேதி ஏழாவது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான அமைச்சர் வரும் மே மாதம் 30 ஆம் தேதி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரு நாள் பயணமாக தமிழகம் வந்தார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதனை  ஆதரித்து வாகன பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

அதேபோல அமித்ஷா, புதுக்கோட்டை திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் மற்றும் அருள்மிகு ராஜராஜேஸ்வரி உடனுறை சத்தியவாகீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் நாளை மறுநாள் சுவாமி தரிசனம் செய்ய அவர் புதுக்கோட்டை வரவுள்ளார். 

ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷிக்கு நீதிமன்றம் சம்மன்: அடுத்த கைது - கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios