உடுமலைப்பேட்டையில் நடந்த சாதி ஆவண படுகொலையில் சிக்கி கணவனை இழந்த கவுசல்யாவை எல்லோருக்கும் தெரியும். அப்புறம் அவருடைய வாழ்க்கை எப்படியெல்லாம் போயிட்டிருக்குது, வேலியில போற ஓணானுங்களை எடுத்து எப்படி தன் ஹேண்ட்பேக்குக்குள்ளே போட்டுக்குது அந்த பொண்ணு அப்படிங்கிறதும் உங்களுக்கு தெரியும். 

கவுசல்யா பற்றிய லேட்டஸ்ட் பரபரப்பு... ஆணவ கொலையில் பாதிக்கப்பட்டதற்காக மத்திய அரசு அவர் மீது பரிதாபப்பட்டு குன்னூர் கண்டோண்ட்மெண்ட் போர்டில் வேலை வழங்கிய வேலையிலிருந்து இப்போது வேலை சஸ்பென்ட் செய்யப்பட்டுவிட்டர்! என்பதுதான். இந்த சஸ்பெண்டுக்கான காரணமாய் சுட்டிக்காட்டப்பட்டது... பிரபல செய்தி நிறுவனத்தின் தமிழ் சேனலில் இந்திய இறையாண்மைக்கு எதிராக கவுசல்யா பேசியிருந்தார்! என்பதுதான். 

‘இந்தியா ஒரு நாடு இல்லை, தமிழகத்தை மத்திய அரசு அடிமைப்படுத்துது. ஆக தமிழகமும் ஒரு மாநிலம் இல்லை.’என்றெல்லாம் அதில் கவுசல்யா பேசியிருந்ததை சுட்டிக்காட்டி இருந்தார்கள். இந்த சூழலில், கவுசல்யாவை இராணுவதுறை வெளியில் தள்ள காரணம் இதுமட்டுமல்ல, பிரதமர் மோடியை அவர் திட்டியதுதான் முக்கிய பிரச்னையே! என்கிறார்கள். அதுவும் ‘நீ, வா, போ’ என்று ஒருமையில் திட்டியுள்ளாராம் கவுசல்யா.

 

எங்கே அப்படி திட்டினார்? என்றால், அவரது பேஸ்புக் ஐடியை காண்பிக்கிறார்கள் பி.ஜே.பி.யினர். அதில் கடந்த ஜனவரி 27-ம் தேதிதியில் ஒரு பதிவை போட்டிருக்கிறார் கவுசல்யா. அந்த பதிவில்...

”மீனவர்களைப் பார்க்க வராத நீ...
நெசவாளர்களை பார்க்க வராத நீ...
விவசாயிகளைப் பார்க்க வராத நீ...

இந்திய பொருளாதார கொள்கை என்று எட்டுவழிச்சாலையையும், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோபோன்ற திட்டங்களை மக்களுக்கு எதிராக நடைமுறை படுத்தி பன்னாட்டு முதலாளிகளை வளர்க்க துடிக்கும் நீ...இங்கு வராதே...திரும்பிச் செல்! #gobackmodi” என்று எழுதியுள்ளார். இது பி.ஜே.பி.யினரின் கவனத்துக்கு போக அவர்கள் கொதித்துவிட்டனராம். அதேவேளையில் கவுசல்யாவின் பேஸ்புக்கில், இந்த பதிவுக்காக வண்ணவண்ணமாக திட்டுக்களை வாங்கிக் கட்டியுள்ளார். 

ஆனாலும் ஆத்திரம் தணியாத பி.ஜே.பி.யினர் இந்த பஞ்சாயத்தை ராணுவ அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு போய் பின்னர் சஸ்பெண்ட் செய்துவிட்டனராம். கவுசல்யாவுக்கு சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்த பின், அவரை சரமாரியாக வசைபாடி ‘ஒரு பிரதமரையே இப்படி பேசுவியா நீ? அதான் கழுத்தை பிடிச்சு வெளியில தள்ளிட்டோம். இத்தனை நாள் வாங்குன சம்பளம், சலுகை பணத்தை திருப்பி கொடு’ என்றும் திட்டியிருக்கிறார்களாம்.