Asianet News TamilAsianet News Tamil

மலைக்க வைக்கும் உடுமலை கவுசல்யா..! மத்திய அரசு பணி கிடைத்த ஒரே வாரத்தில் இப்படியொரு காரியம் செய்தாரா...?

மத்திய அரசு வேலையை உறுதி செய்த ஒரே வாரத்தில் உடுமலை கவுசல்யா செய்த காரியம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

udumalai kowsalya suspended
Author
Tamil Nadu, First Published Feb 2, 2019, 12:12 PM IST

மத்திய அரசு வேலையை உறுதி செய்த ஒரே வாரத்தில் உடுமலை கவுசல்யா செய்த காரியம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. udumalai kowsalya suspended

திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டையை சேர்ந்த சங்கரை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார் கவுசல்யா. பின்னர் சங்கர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இதில் சங்கரின் மனைவி கவுசல்யாவும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விதவைகளுக்கான ஓய்வூதியம், அகவிலைப்படி உட்பட மாதம்தோறும் ரூ.11,250 வழங்கப்பட்டது.

 udumalai kowsalya suspended

சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கு திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், பெருமாள்புரம் பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை உண்டு, உறைவிடப்பள்ளியில் சமையலர் பணியும் ஒதுக்கப்பட்டது. கவுசல்யா ஆதரவற்ற பெண் என்றும், கணவனை இழந்த பெண் என்றும், மிகப்பெரிய கொடுமைக்கு உள்ளான பெண் என்றும் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.udumalai kowsalya suspended

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்டில் இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலையில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார். கடந்த நவம்பர் 30 தேதி கவுசல்யாவின் மத்திய அரசு வேலை நிரந்தரமாக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அது வரை காத்திருந்து பின்னர் ஒரு வாரத்தில் சக்தியை மறுமணம் செய்துகொண்டார் கவுசல்யா. டிசம்பர் 9ம் தேதி சக்தியை திருமணம் செய்து கொண்டார் கவுசல்யா. பணி நிரந்தரத்திற்கு முன்பே சக்தியை திருமணம் செய்து கொண்டிருந்தால் மத்திய அரசு பணி நிரந்தரமாவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதை மனதில் கொண்டே காத்திருந்து காரியம் சாதித்த பிறகு சக்தியை மணந்திருக்கிறார் கவுசல்யா என்கிற உண்மை வெளியாகி இருக்கிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios