இந்திய தேசத்திற்கு எதிராக பேசிய குற்றசாட்டில் உடுமலை கவுசல்யா மத்திய அரசு பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

உடுமலை கவுசல்யா சமீபத்தில் சக்தி என்கிற வாலிபரை மறுமணம் செய்து கொண்டார். சில அமைப்புகளுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக செயல்படுவதாக அவரை சங்கரின் கிராமத்தினர் ஒதுக்கி வைத்தனர். இந்நிலையில் மறுமணம் செய்து கொண்ட சக்தி மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. இந்நிலையில் அரசுகளுக்கு எதிராக அவர் மக்களை தூண்டும் வகையில் உருமலை கவுசல்யா பேசி வந்த வீடியோக்கள் வெளியாகின. ராணுவத்தை அவமதிக்கும் விதமாகவும் அவர் பேசியது வெளியானது. இந்நிலையில் அவர் இந்திய  தேசத்திற்கு எதிராக பேசியதாக இராணுவ தளவாட தொழிற்சாலை பணியிலிருந்து மூன்று மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

சங்கர் இறந்த பிறகு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் இப்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்டில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார். அரசு செயல்பாடுகளுக்கு எதிரான ஒரு சித்தாந்ததையும், புரட்சி என்ற பெயரில் எதிர்மறையான கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு தீவிரமாக பணியற்றி வருவதாகவும், அந்த கொள்கைகளை பிரச்சாரமும் செய்து வருவதாகவும் ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

 

அப்படிப்பட்டவர் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ ரகசியங்களை அறிகின்ற ஓரு இடத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா? வேறு ஒரு துறையில் அவருக்கு பணி மாறுதலை கொடுப்பதன் மூலமாக இந்த பிரச்னைகளிலிருந்து பாதுகாப்பு துறை விடுவித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அவர் மூன்று மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த நவம்பர் 30 தேதி கவுசல்யாவின் அரசு வேலை நிரந்தரமாக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அது வரை காத்திருந்து பின்னர் ஒரு வாரத்தில் சக்தியை மறுமணம் செய்துகொண்டார் கவுசல்யா.