திமுக மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு பொற்கிழி வழங்கிய உதயநிதி!

திமுக மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு தேனி மாவட்டம் கம்பத்தில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார்

Udhayanidhi stalin gave porkizhi to dmk senior pioneers smp

திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அவர் பயணப்படும் போதும், திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி வருகிறார். அண்மையில், பொற்கிழி தொகையை ரூ.5000லிருந்து, ரூ.10,000ஆக உதயநிதி ஸ்டாலின் உயர்த்தியிருந்தார்.

அந்த வகையில், தேனி மாவட்டம் கம்பத்தில் திமுக மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கி கவுரவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு முழுவதும் நாம் பயணிக்கின்ற மாவட்டங்கள் தோறும் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்கி வருகிறோம்.

 

 

அந்த வகையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, தேனி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டக் கழகத்தை சேர்ந்த 1000 மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10,000 பொற்கிழியை கம்பத்தில் இன்று வழங்கினோம். கழகத்தின் வளர்ச்சிக்காக தன்னலம் பாராமல் உழைத்த, கழக மூத்த முன்னோடிகளின் நலனை காக்கின்ற வகையில், அவர்களுக்கு என்றும் துணை நிற்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா? - அண்ணாமலையின் நக்கல் பதில்

முல்லைப்பெரியாறு அணையைக் கட்டி தேனி - மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த கர்னல் ஜான் பென்னி குவிக்கிற்கு தேனி லோயர்கேம்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில், அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து உதயநிதி ஸ்டாலின் மரியாதை செய்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios