Two thieves who stole two cars and cars in Chennai have been identified with the CCTV camera and placed in jail.
சென்னையில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களை திருடி வந்த இரண்டு திருடர்களை சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் கண்டு சிறையில் அடைத்தனர்.
சென்னை கே.கே நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனையடுத்து போலீஸார் தீவிர கண்காணிப்பிலும் விசாரணையிலும் ஈடுபட்டு வந்தனர். இதைதொடர்ந்து வாகனங்களை திருடி வந்த குற்றவாளிகள் இரண்டு பேர் வேறு ஒரு இடத்தில் பைக்கை திருடும் போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளனர்.

இதை கண்டறிந்த போலீஸார் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். பின்னர், விசாரணையில் வாகனங்களை திருடியது குன்றத்தூரை சேர்ந்த மதன் மற்றும் பால்சாமி என்பது தெரியவந்தது.
இருவரிடமும் போலீஸார் விசாரித்த போது, சாலைகளில் கிடக்கும் வாகன சாவிகளை சேகரித்து வைத்து கொண்டு அவை எந்த வண்டியில் சேருகிறதோ அந்த வண்டியை திருடுவோம் என தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இவர்களிடம் இருந்து 3 கார்கள் மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
