Asianet News TamilAsianet News Tamil

பிளேடு பக்கிரியே காணொலியில் பேசுறப்ப, சுகேஷை ரயில்ல இட்டாரணுமா?: வெடிக்குது பாஸ் விமர்சனம்...

Two leaves symbol middleman Sukesh brought to Coimbatore court
Two leaves symbol middleman Sukesh brought to Coimbatore court
Author
First Published Jun 9, 2017, 8:28 AM IST


நம்ம பிக்பாக்கெட் திருடன் பிளேடு பக்கிரியை கூட ‘பாதுகாப்பு காரணம்’ கருதி கடலூர் ஜெயிலாண்ட இருந்து காணொலி காட்சி மூலம் திருநெல்வேலி கோர்ட்டு வாய்தா நடத்தி எக்ஸ்ட்ரா பதினஞ்சு நாள் களி தின்ன வைக்குது. 

ஆனா தேசத்தையே திரும்பி பார்க்க வெச்ச தேர்தல் கமிஷனுக்கே கமிஷன் கொடுக்க முயற்சி பண்ணியதாக தினகரன் மீது பாய்ந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுகேஷை கோவை வரை ரயில்ல கொண்டாந்து ஆஜர்படுத்தியது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது.

கோவை கணபதி பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ராஜவேல். இவர் சில நிறுவனங்களை நடத்ஹ்டி வருகிறார். சமையல் உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்து வருகிறார். இவரிடம் கடந்த 2010 ஆண்டில் டெல்லியில் இருந்து பிரகாஷ் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் கர்நாடக மாநிலத்தின் அரசு இணை இயக்குநராக உள்ளதாகவும், அரசின் பல திட்ட அலுவலகங்களின் பயன்பாடுக்காக சமையல் உபகரணங்கள் தேவைப்படுவதாகவும் அதற்கான டெண்டர் படிவத்தை பூர்த்தி செய்து தனக்கு அனுப்புங்கள் என்று கூறியிருக்கிறார். அந்த படிவத்தை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் ரெண்டு லட்சத்து நாற்பத்து மூவாயிரம் பணமும் அனுப்ப சொல்லியிருக்கிறார். ராஜவேலுவும் அதை நம்பி அப்படியே பணம் அனுப்பியிருக்கிறார். 

ஆனால் அந்த நபர் தொடர்ந்து பணம் கேட்டுக் கொண்டே இருந்தததால் ராஜவேல் கர்நாடக அரசு தரப்பில் இதை கிராஸ் செக் செய்தார். தான் ஏமாற்றப்பட்டிருப்பது புரிந்தது. உடனே அவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் என்று சொல்லப்பட்ட சுகேஷை தேடினர். இந்த வழக்கில் சுகேஷின் அப்பா சந்திரசேகர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சுகேஷ் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். 


ஆனால் வழக்கு பதிவான நாளில் இருந்து சுகேஷ் தலைமறைவாகவே இருந்தார். வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்றபோதும் சுகேஷும், அவரது அப்பாவும் ஆஜராகவில்லை. 

இந்நிலையில் தினகரன் வழக்கில் சுகேஷ் கைதாகி திகாரில் இருக்கும் நிலையில் கோவையில் இந்த வழக்கின் வாய்தா வந்திருக்கிறது. இதனால் சுகேஷுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த கோவை குற்றவியல் 2வது நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்த தில்லியிலிருந்து ரயிலில் கோவைக்கு அழைத்து வந்தனர் போலீஸார். 

Two leaves symbol middleman Sukesh brought to Coimbatore court

தினகரன் மீதான வழக்கில் சுகேஷ் மிக முக்கியமான குற்றவாளி. இது போக இவர் மீது மேலும் சில வழக்குகள் உள்ள நிலையில் சென்சிடீவான சுகேஷை ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து ரயிலில் கூட்டி வரவேண்டும்? வீடியோ கான்ஃப்ரன்ஸிங் முறையிலேயே ஆஜர்படுத்தியிருக்கலாமே! தில்லி டூ கோவை பின் கோவை டூ தில்லி என ரயில் பயணத்தின் நடுவே சுகேஷ் தப்பிச்செல்லவோ அல்லது அவரது பாதுகாப்பிற்கு ஏதாச்சும் அச்சுறுத்தலோ நடந்தால் அது தேவையற்ற பிரச்னைதானே! வந்தேதான் ஆக வேண்டுமென்றால் விமானத்தை பயன்படுத்தியிருக்கலாமே? சுகேஷ் ஒன்றும் பஞ்சத்துக்கு குற்றவாளியல்ல. 

தன்னை மத்திய அரசு, கேரள அரசு, மஹாராஷ்டிர அரசு ஆகியவற்றின் செயலாளர் எனவும், மத்திய மந்திரிகளின் மச்சான் என்றெல்லாம் கூட அறிமுகமாகி ஆட்டையை போட்டவர், அவர் விஷயத்தில் இவ்வளவு ரிஸ்க் தேவையா? பொதுவான விமர்சனம் எழுந்துள்ளது. 

ஆனால் இதற்கு பதில் தரும் நீதித்துறை ‘சில வழக்குகளில் முக்கிய குற்றவாளி நேரில் ஆஜராகிடதான் வேண்டுமென்று சட்டம் சொல்கிறது. நெடுந்தூரம் பயணம் செய்தும் குற்றவாளியை ஆஜர்படுத்துவது பொதுவாக இருக்கும் வழக்கம்தான். இதை தேவையில்லாமல் சர்ச்சையாக்க வேண்டாம். சட்டத்திற்கு எல்லாம் தெரியுமென்பதை நம்பவேண்டும்.” என்று கண்டிப்புடன் கூறுகிறது. 


 

Follow Us:
Download App:
  • android
  • ios