பள்ளி மாணவியை காதலிப்பதில் இரண்டு ஊர் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்குள் மோதல்
மாணவர்கள் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற ஆசையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள். ஆனால் தற்போது உள்ள இளைய சமுதாய மாணவர்களோ தீய பழக்கங்களை நோக்கி செல்லும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பள்ளியில் வைத்து புகை பிடிப்பது, மது பானம் சாப்பிடுவது என தொடர்ந்த நிகழ்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதி மோதலால் ஒரு மாணவனை சக மாணவர்கள் அரிவாளார் வெட்டிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பள்ளி மாணவர்களுக்குள் காதலிப்பது தொடர்பான பிரச்சனையில் இரு தரப்பு மாணவர்கள் மோதிக்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்காக மோதிக்கொண்ட மாணவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நத்தம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.இந்தப் பள்ளிக்கு சாத்தாத்தாம் பாடி பட்டி ,பரப்பநாயக்கன்பட்டி ,மது காரன்பட்டி பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தினசரி அரசு பேருந்தில் பயணம் செய்து பயின்று வருவது வழக்கம். இந்நிலையில் சாத்தான்பாடி பட்டி ,பரப்பநாயக்கம்பட்டி, மது காரன்பட்டி ஆகிய மாணவர்களிடையே பேருந்தில் இடம் பிடிப்பதில் கடந்த சில மாதங்களாகவே தகராறு இருந்து வந்து உள்ளது.
வீடியோ வெளியாகி பரபரப்பு
இந்த நிலையில் சாத்தாம் பாடி பட்டி ,பரப்ப நாயக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையே பேருந்தில் வரும் பள்ளி மாணவியை காதலிப்பதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் மதுகாரன்பட்டிக்கு அரசு பேருந்து வந்து நிற்கும் பொழுது இரு ஊரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகளானது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்..! பிரபல இளம் கிரிக்கெட் வீரர் மீது பெண் பரபரப்பு புகார்
