TVK Maanadu : அரசியல் தலைவர், தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு பல லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் தற்பொழுது விக்கிரவாண்டில் உள்ள வி. சாலையில் கோலாகலமாக துவங்கியிருக்கிறது.

இந்த 2024 ஆம் ஆண்டின் துவக்கமே தளபதி விஜயின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இனிப்பு தரும் செய்தியாக அமைந்தது தளபதி விஜயின் அரசியல் வருகை. கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தளபதி விஜய் வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியின் கொடி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த சூழலில் இன்று அக்டோபர் 25ஆம் தேதி விக்ரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

TVK Maanadu: அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய தவெகவினர்! முக்கிய நிர்வாகி பலி! அதிர்ச்சியில் விஜய்!

அதை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் கடந்து சில நாட்களாகவே ஜோராக நடந்து வந்த நிலையில், தமிழகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தற்பொழுது விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் த.வெ.க கட்சியின் மாநில மாநாடு தொடங்கி இருக்கிறது. வெள்ளை நிற சட்டை அணிந்து தனக்கே உரித்தான வேகத்தில் மேடையில் துள்ளி குதித்து ஓடி வந்த தளபதி விஜய், சுமார் 800 மீட்டருக்கு போடப்பட்டிருக்கும் ரேம்ப் வாக் மேடையில் நடந்து சென்று தனது ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார். 

அப்போது கட்சி கொடியின் நிறத்தில் தொண்டர்கள் வைத்திருந்த துண்டுகளை அவர் மீது வீச, அதை ஒவ்வொன்றாக எடுத்து தனது தோளில் போட்டுகொண்டு ஜோராக வீரநடை போட்டுள்ளார் தளபதி விஜய், அப்போது கூட்டத்தில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அளித்த ராணுவ மரியாதையை ஏற்றுக்கொன்று தொடர்ந்து மிடுக்கான நடைபோட்டர் தளபதி விஜய்.

கப்பு முக்கியம் பிகிலு! தவெக மாநாடு நடத்தும் விஜய்க்கு வாழ்த்து மழை பொழிந்த கோலிவுட் ஸ்டார்ஸ்