Vijay also Known as Mohammed Vijay after Attend Iftar : இன்று இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறந்திருக்கிறார், தொழுதிருக்கிறார், துவாப் செய்திருக்கிறார் என்றெல்லாம் குறிப்பிட்ட அவர்கள் விஜய் இன்று முகமது விஜய்யாக மாறிவிட்டார் என்று இஸ்லாமிய மக்கள் கூறியிருக்கின்றனர்.

Vijay also Known as Mohammed Vijay after Attend Iftar : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில், தளபதி விஜய் தலையில் தொப்பி அணிந்தது மட்டுமின்றி வெள்ளை சட்டை மற்றும் வேஷ்டி அணிந்து இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ரமலான் மாதத்தை முன்னிட்டு விஜய் இன்று ஒருநாள் மட்டும் நோன்பு இருந்தார். இதையடுத்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோன்பு திறந்தார். அதுமட்டுமின்றி இஸ்லாமியர்கள் என்னென்ன செய்வார்களோ அதையெல்லாம் விஜய் செய்தார். அதாவது தொழுதார், துவாப் செய்தார். இப்படி இஸ்லாமியர்களின் வழக்கப்படி நோன்பு இருந்து, நோன்பு திறந்து, தொழுகை செய்து, துவாய் செய்த விஜய் இன்று முகமது விஜய்யாக மாறிவிட்டார் என்று இஸ்லாமிய மக்கள் கூறி வருவதோடு விஜய்யை கொண்டாடி வருகின்றனர்.

நபிகள் நாயகத்தின் வாழ்க்கை – இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய்!

இது குறித்து இஸ்லாமிய மக்கள் கூறியிருப்பதாவது: மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் இஃப்தார் நோன்பை ஒரு சம்பிரதாயமாக பார்த்தார்கள். ஆனால், இந்த அரசியல் வரலாற்றில் இஃப்தார் நோன்பை இஸ்லாமியர்களின் கடமையாக் பார்த்தது தளபதி விஜய் மட்டும் தான். மேலும், விஜய் வெறும் விஜய் அண்ணா அல்ல அவர் முகமது விஜய் அண்ணாவாக ஆகிவிட்டார் என்கிறார்கள். சகோதரத்துவத்தை நம்பக் கூடியவர்கள். ஒரு பங்கு அன்பு செலுத்தினால் திருக்குர் ஆனில் பல பங்கு அன்பு செலுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. அதை இத்தனை இஸ்லாமிய மக்கள் தளபதிக்கு அன்பு செலுத்துவார்கள். அது 2026ல் உங்களுக்கு தெரியவரும் என்று கூறியிருக்கின்றனர.

Thalapathy Vijay: தலையில் குல்லாவுடன் இஃப்தார் நோம்பில் பங்கேற்ற தளபதி விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தில் சார்பில் நடைபெற்ற இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65 மற்றும் நோன்பு கஞ்சி உள்பட பழ வகைகளும் கொடுக்கப்பட்டது. மேலும் இஃப்தார் நோன்பு திறந்த இஸ்லாமியர்களுக்கு விஜய் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையுடன் கூடிய பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் கூறியிருப்பதாவது: நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பின்பற்றி மனிதநேயம் மற்றும் சகோதரத்துவம் இந்த இரண்டையும் பின்பற்றும் இஸ்லாமிய அன்பர்களுக்கும், எனது அழைப்பை ஏற்று இங்கு வந்தவர்களுக்கும் நன்றி என்றார். மேலும், பேச ஆரம்பிக்கும் போது என் நெஞ்சியில் குடியிருக்கும் இஸ்லாமிய அன்பர்களுக்கு என்று ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயோ பாவம்! அவங்களே கன்பூஷன் ஆயிட்டாங்க! அமித்ஷாவுக்கு பதில் சந்தான பாரதியின் போஸ்டர்! பாஜக சொல்வது என்ன?