ttv dinakaran aunt passed away
அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் அண்ணியும், துணை பொது செயலாளர் டிடிவி.தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி இன்று காலமானார்.
அதிமுக முன்னாள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளராக டாக்டர் வெங்கடேஷ் இருந்து வந்தார். பின்னர், அவர் தனது கட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். இவரது தாய் சந்தானலட்சுமி. அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் அண்ணி என்பதும், துணை பொது செயலாளர் டிடிவி.தினகரனின் மாமியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக இருதய நோய் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த சந்தானலட்சுமி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் சந்தானலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
