Asianet News TamilAsianet News Tamil

கல்விதுறையில் நிகழும் குறைகளை சுட்டிக்காட்டினால் ஆசிரியரை நீக்குவீர்களா? அரசுக்கு எதிராக தினகரன் காட்டம்

கல்வி முறையில் உள்ள குறைகளை சுட்டிகாட்டிய ஆசிரியர் உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

tTV Dhinakaran condemns suspension of teacher for commenting against dmk government vel
Author
First Published Mar 8, 2024, 7:19 PM IST | Last Updated Mar 8, 2024, 7:19 PM IST

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் கல்வித்துறையில் நிகழும் குறைகளையும், மாணவர்களுக்கு தேவையான கல்வி முறைகள் குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் எழுதி வரும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்களை அரசுக்கு எதிராக அவதூறு பதிவிட்டதாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிறையில் இருந்தபடியே கால்பந்து போட்டிக்கு முதல் பரிசு வழங்கும் செந்தில் பாலாஜி? கரூரில் வைக்கப்பட்டுள்ள பேனரால் சர்ச்சை

சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த பதினைந்து நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேச முன்வராத திமுக அரசு, கல்வித்துறையில் நிகழும் குறைகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.

“முதல்வர் ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னீசியா” - அண்ணாமலை விமர்சனம்

எனவே, ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பள்ளியில் பணியாற்ற அனுமதிப்பதோடு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு தொடக்கப் புள்ளியான ஆசிரியர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios