நாளை (டிச.26 ) சுனாமி நினைவு தினம்... 18 ஆண்டுகள் கடந்தும் நீங்கா சோகம்!!
சுனாமி தாக்கி 18 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அதனால் உயிரிழந்தோரின் நினைவுகள் சோகத்தை ஏற்படுத்துகின்றன.

சுனாமி தாக்கி 18 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அதனால் உயிரிழந்தோரின் நினைவுகள் சோகத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளில் சுனாமி ஏற்பட்டது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!
கடலலைகள் ஆக்ரோசமாக பனை உயரத்துக்கு எழுந்து வந்ததால் கடற்கரையோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இந்த சுனாமியில் சிக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் உயிரிழந்தனர். இதை அடுத்து சுனாமி தாக்கி உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பச்சை பசேல் என காட்சியளிக்கும் நெல் வயல்கள்… விமான நிலையம் அமைக்கப்பட உள்ள கிராமத்தின் கதை!!
அந்த வகையில் நாளை சுனாமி தாக்கிய 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். சுனாமி தாக்கி பல ஆண்டுகள் கடந்தாலும் அதில் உயிரிழந்தவர்களை எண்ணும் போது நீங்கா துயத்தில் ஆழ்த்துகிறது அவர்களின் நினைவுகள்.