Asianet News TamilAsianet News Tamil

சுனாமி கோர முகத்தின் 18ம் ஆண்டு; பொதுமக்கள் அ ஞ்சலி

சுனாமி தாக்கியதன் 18ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், உறவுகளை இழந்த பலரும் கடற்கரைகளில் ஒன்று கூடி தங்கல் அஞ்சலியை செலுத்தினர்.
 

Tsunami 2004 Tamil Nadu remembers victims on 18th anniversary
Author
First Published Dec 26, 2022, 5:20 PM IST

கடற்கரை மணல் பரப்பில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, அவ்வபோது அவர்களின் கால்களை அலைகளாக தொட்டுவிட்டுச் செல்லும் கடற்கரை 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாளில் தன் இன்னொரு முகத்தை காட்டியது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரையில் நாம் பார்த்திராத அளவில் அலைகள் எழத்தொடங்கின. கடலில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்த மக்கள் கடலையே வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சமூக விரோதிகள்

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பனைமரம் உயரத்திற்கு வந்த கடல் அலையானது கரையோரம் இருந்த மக்கள் அனைவரையும் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் சென்றது. கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள், மீனவர்களின் குடிசைகள், வீடுகள் என அனைத்தும் அலையில் சிக்கி தரைமட்டமாயின. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேளாங்கண்ணி வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் தங்கள் உடன் வந்தவர்களை தற்போதும் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

மகாகவி பாரதியின் பேத்தி மரணம்; முதல்வர் இரங்கல்

அப்படிப்பட்ட சுனாமி பேரலையின் 18ம் ஆண்டு இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரை, பெசன் நகர் கடற்கரை, வேலாங்கண்ணி கடற்கரை, கடலூர் சில்வர் பீச் என தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள், மீனவர்கள் தங்கள் உறவினர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தினர்.

ஒரு சில இடங்களில் அமைதி ஊர்வலம், மௌன அஞ்சலி உள்ளிட்டவையும் நடைபெற்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios