சென்னையில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிரைஜின் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னையில் 2 அலுவலங்கள் இயங்கி வருகின்றன. 

 

கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் இந்த நிறுவனம் அமெரி்க்கா, லண்டன், ஜெர்மனி உள்ளிட்ட  நாடுகளில் கிளையை பரப்பி வணிகம் செய்து வருகிறது. இதனிடையே டிரைஜின் நிறுவவனத்தின் மீது வரி ஏய்பு புகார் எழுந்துள்ளது. 

இதுதவிர வெளிநாடு பண பரிவர்த்தனையில் வீதி மீறல் நடைபெற்றதாகவும், கணக்குகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை அண்ணாசாலையில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகம் உட்பட 2 இடங்களில் காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.