trichy placed top 10 list of swatch bharath

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூய்மையான நகரங்களின் பட்டியலை அமைச்சர் வெங்கய்யா நாயுடு வெளியிட்டார்.

அதில், சிறந்த தூய்மையான நகரங்களின் தரவரிசைப் பட்டியலில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 3 இடத்தில் இருந்த திருச்சி மாநகராட்சி தற்போது 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மிகவும் மோசமான, தூய்மை குறைந்த நகரமாக, உத்தரப்பிரதேச மாநிலம் ’கொண்டா’ நகரம், பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் ஆண்டு தோறும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்படும்.

அதன்படி, இந்தாண்டு சுத்தமான நகரமாக, மத்திய பிரதேச மாநிலத்தின் ‘இந்தூர்’ நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், ’டாப் - 10’ நகரங்களில் தமிழகத்தின் ‘திருச்சி’ இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தூய்மையான நகரமாக 6ம் இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு வெளியான பட்டியலில், மைசூர் முதலிடம் பிடித்தது. ஆண்டு தோறும் நகரங்களில் அமைந்துள்ள கட்டுமான வளர்ச்சி, சுத்தம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில், சிறந்த சுத்தமான நகரங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.