Asianet News TamilAsianet News Tamil

வெடிமருந்து தொழிற்சாலை விபத்து நடந்தது எப்படி ?

trichy bullet-factory-xbjhtp
Author
First Published Dec 1, 2016, 1:22 PM IST


திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தில் ஆத்தூரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கு சொந்த மான வெடிமருந்து தயாரிக்கும் தொழிற் சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலை கிராமத்தில் பொதுமக்கள் வாழும் குடியிருப்பு பகுதியிலேயே சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ளது .

முறையற்ற முறையில் இதற்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி சமூக ஆர்வலர்கள் , அங்குள்ள பொதுமக்கள் பல முறை முறையிட்டும் போலீசாரோ , அதிகாரிகளோ சிறிய நடவடிக்கை கூட எடுக்கவில்லையாம் .

trichy bullet-factory-xbjhtp

இங்கிருந்து வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்கள் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் விற்கப்படுகின்றன . இதற்காக 20 க்கும் மேற்பட்ட பிளாண்டுகள் அமைத்து சட்டவிரோதமாக பல நூறு டன் வெடிமருந்து ரசாயனம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணிக்கு இரவு ஷிப்ட் முடிந்து 15 தொழிலாளர்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்தனர். காலை ஷிப்ட் ஊழியர்கள் 15 பேர் தொழிற் சாலைக்குள் சென்றனர்.

அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி மருந்து குடோன் வெடித்து சிதறியது.  இதில் தொழிற் சாலை உருக்குலைந் தது. வெடி சத்தம் கேட்டு முருங்கப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டு பார்த்தனர். வெடி மருந்து நெடியுடன் பல கி.மீ தூரத்திற்கு புகை மண்டலம் சூழ்ந்தது.

அப்போது தொழிலாளர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து ஆங்காங்கே சிதறி கிடந்தது. வெடி மருந்து வைக்கப்பட்டிருந்த 3 குடோன்களும் தரைமட்டமானது.

வெடிமருந்து வெடித்து சிதறியதில் 15 தொழிலாளர் களும்  பலியாகி விட்டனர். முருங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி, வாகர்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மூர்த்தி, செந்தில், குமார், ஆகிய 5 பேர் உடல் சிதறி பலியானது உறுதி செய்யப் பட்டது.

இரவு ஷிப்ட் முடிந்த 5 தொழிலாளர்கள் தங்கள் உடைகளை எடுப்பதற்காக தொழிற்சாலைக்குள் சென் றுள்ளனர். அவர்களும் இதில் சிக்கி கொண்டனர்.

trichy bullet-factory-xbjhtp

எனவே தொழிற் சாலைக்குள் இருந்த 20 தொழிலாளர்களும்  உடல் சிதறி பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. பலரது உடல் 2 கி.மீ சுற்று வட்டாரத்திற்குள் கை வேறு, கால் வேறு என துண்டு துண்டாகி சிதறி கிடந்தது.

பலரது முகம் உள்பட அனைத்து உறுப்புகளும் உருக்குலைந்து போனதால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

6 வாகனங்களில் தீய ணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். 10 ஆம்புலன்ஸ் வேன்களும் வரவழைக்கப் பட்டது. சிதறி கிடந்த உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்று காலை மழை பெய்து கொண்டிருந்ததால் மீட்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது.

திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துறையூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார், மற்றும் அதிகாரிகள் விரைந்தனர்.

எங்கும் மக்கள் கண்ணீர் ஓலத்துடன் உறவினர்கள் உடல்களை தேடி அலைந் தனர்.

தொழிற்சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாலும் ஒரு கிராமமே பாதிக்கப் பட்டதாலும் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அதிகாரிகளை கண்டித்து திருச்சி - சேலம் சாலையில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸ் அதிகாரிகள் காரை வழி மறித்தனர் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை அதிபர் வெற்றிவேல் மற்றும் தொழிற்சாலை மேலாளர் உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios