சென்னை வேளச்சேரியில் மின்சார ரயிலின் இன்ஜினை வெல்டிங் செய்தபோது திடீரென தீப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, வேளச்சேரியில் பறக்கும் ரயில்களை பழுது பார்க்கும் பணி, வேளச்சேரி பணிமனையில் இன்று மதியம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு ரயிலின் என்ஜினில் வெல்டிங் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, ரயில் பெட்டியில் திடீர் தீப்பற்றியது.
ரயில் நிலையம் அருகிலேயே பணி மனை உள்ளதால், என்ஜினில் தீ பற்றியதை அடுத்து ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து, ரயில்வே ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அனுப்பினர். பின்னர், அங்க வந்த தீயணைப்பு விரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ அணைக்கப்பட்ட பிறகே, ரயில் பயணிகள் நிம்மதியடைந்தனர். இந்த தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு நடத்துகின்றனர்.
