சென்னையில் போக்குவரத்து காவலரை கீழே தள்ளி விபத்து ஏற்படுத்தியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட போக்குவரத்து ஆய்வாளருக்கு ஒரு மாதத்திற்குள் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனாம்பேட்டையில் பணியாற்றி வந்த போக்குவரத்து காவலர் தர்மராஜ், தனது தாயாரின் இறுதிச் சடங்குக்கு விடுப்பு தராத விரக்தியில், வாக்கி டாக்கி மூலம் போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் கூறியுள்ளார். இதனையடுத்து காவலர் தர்மராஜாவை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். 

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் தருமராஜை, காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் துரத்திச் சென்று, விபத்தில் சிக்க வைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பொறுப்புள்ள பதிவியில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரியே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபட்டது பொதுமக்களியை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் ஆணையர், ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். தற்போது 28 நாட்கள் கடந்த நிலையில், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் ரவிச்சந்திரனுக்கு அம்பத்தூர் போக்குவரத்துப் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியிடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பிரச்னையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் காவலர் தர்மராஜா சஸ்பெண்ட் உத்தரவில்தான் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.