ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா செல்கிறீர்களா.! இரண்டு நாட்களுக்கு போக்குவரத்திற்கு தடை- வெளியான அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் பகுதிகளில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ராமநாத சுவாமி ஆலயம் நடை மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 

Traffic has been blocked on the occasion of Prime Minister Modi's visit to Rameswaram KAK

ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா

ராமேஸ்வரத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பகுதி ஆன்மிக தளமாக இருப்பதால் வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதே போல அழகான கடற்கரை மற்றும் தீவுகள் உள்ளதால் இந்த பகுதிக்கு வர சுற்றுலா பயணிகள் அதிகளவு விருப்பப்படுவார்கள். இந்தநிலையில், பிரதமர் மோடி நாளை மற்றும் நாளை மறு தினம் ராமேஸ்வரத்தில் தங்கவுள்ளார். இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது. 

Traffic has been blocked on the occasion of Prime Minister Modi's visit to Rameswaram KAK

ராமேஸ்வரத்தில் போக்குவரத்திற்கு தடை

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  20.01.2024 மற்றும் 21.01.2024 அன்று  பாரதப் பிரதமர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நலன் கருதி போக்குவரத்துப் பாதைகள் மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி,  போக்குவரத்து வழித்தடங்களில் ஏற்படும் மாற்றங்களின் விவரங்கள்: 

20.01.2024 அன்று மதியம் 12:00 மணி முதல் 2:30 மணி வரை ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் ராமேஸ்வரம் நகர் பகுதியிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 21.01.2024 அன்று ராமேஸ்வரம் நகரில் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இரு நாட்களுக்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Traffic has been blocked on the occasion of Prime Minister Modi's visit to Rameswaram KAK

தனுஷ்கோடி செல்லவும் தற்காலிக தடை

 தனுஷ்கோடி சுற்றுலா தலத்திற்கு போக்குவரத்து வழி மாற்றம் தொடர்பான விவரங்கள்: 

20.01.2024 நண்பகல் 12:00 மணி முதல் 21.01.2024 நண்பகல் 12:00 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசன மாற்றம் குறித்த விவரம்:

20.01.2024 அன்று  பாரதப் பிரதமர் அவர்களின் வருகையையொட்டி காலை 08:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை.  பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  பாதுகாப்பு நலன் கருதி ராமேஸ்வரம் நகரம் முழுவதும் 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய தேதிகளில் ட்ரோன் கேமரா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார் .

இதையும் படியுங்கள்

மோடி தமிழகம் வருகை.. ஶ்ரீரங்கம் , ராமேஸ்வரம் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் ரத்து- மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios