மோடி தமிழகம் வருகை.. ஶ்ரீரங்கம் , ராமேஸ்வரம் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் ரத்து- மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக இன்று சென்னை வரும் அவர், நாளை திருச்சி ஶ்ரீரங்கத்திற்கும், நாளை மறுதினம் ராமேஸ்வரத்திற்கும் செல்லவுள்ளதையடுத்து கோயில்களில் பொதுமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் வரும் மோடி
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதனையடுத்து இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (ஜன.19) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து ராஜ் பவன் செல்லும் பிரதர் மோடி அங்கே இரவு ஓய்வெடுக்கிறார். நாளை காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு சென்று செல்கிறார். அங்கிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும் கலந்து கொள்கிறார்.
கோயில்களில் தரிசனம் ரத்து
பிற்பகல் ராமேஸ்வரம் செல்லும் மோடி, ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொள்கிறார். 21ஆம் தேதி, காலை அக்னீ தீர்த்த கரையில் குளிக்கிறார். இதனையடுத்து பிரதமர் மோடி சாலை மறக்குமாக அரிச்சல் முனை சொல்கிறார். தொடர்ந்து கோதண்ட ராமர் கோவில் நடைபெறும் ராமர் பாதை என்ற புத்தகத்தையும் வெளியிடுகிறார். இந்தநிலையில் பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 2 நாள் பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லையென மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு பிரதமர் 20ம் தேதி அன்று வருகை தருவதை முன்னிட்டு பிரதமர் பாதுகாப்பு நலன் கருதி 19ம் தேதி மாலை 6மணி முதல் 20ம் தேதி பிற்பகல் 2.30 மணிவரை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.
போக்குவரத்திற்கு தடை
இதே போல ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலும் பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 20ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 20ஆம் தேதி 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்