Asianet News TamilAsianet News Tamil

Chennai Rain: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சென்னை… 5 சுரங்கப்பாதைகள் மூடல்!!

விடிய விடிய பெய்த மழையால் சென்னையில் உள்ள 5 முக்கிய சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதை அடுத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Traffic ban on 5 tunnels in Chennai
Author
Chennai, First Published Nov 27, 2021, 5:56 PM IST

விடிய விடிய பெய்த மழையால் சென்னையில் உள்ள 5 முக்கிய சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதை அடுத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வரும் 30 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று, கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதனால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் 23 மாவட்டங்களில் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மேற்கு மாம்பலம், தியாகராய உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மீண்டும் வெள்ள நீர் சாலைகளில் தேங்கியுள்ளது.

Traffic ban on 5 tunnels in Chennai

ஏற்கனவே பெய்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில் தற்போது பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மேலும் கனமழை காரணமாக தியாகராயர் நகர் மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு ஆரம்பித்த மழை இன்று காலை வரை விட்டு விட்டு கன மழையாக பெய்தது. ஆவடியில் அதிகபட்சமாக 20 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. மாமல்லபுரத்தில் 18 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. கோயம்பேடு, சென்ட்ரல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், போரூர், மயிலாப்பூர் என மாநகரம் முழுவதும், புறநகர்ப் பகுதிகளிலும் அவ்வப்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து குளம் போல் மாறியது. சென்னையில் கே கே நகர், அசோக் நகர், தி. நகர், மேற்கு மாம்பலம் என பல பகுதிகளுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகள் மட்டுமல்லாது குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளில் வசிப்பவர்கள் அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு செல்லக் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Traffic ban on 5 tunnels in Chennai

சென்னையில் கனமழை காரணமாக தியாகராயர் நகர் மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. பள்ளிக்கரணை அடுத்த நாராயணபுரத்தில் உள்ள ஏரியில் இருந்து வெளியேறி வரும் உபரி நீரால் கொளத்தூர், வெள்ளக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு வசிக்கக் கூடிய மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios