Torn national flag
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பறந்த தேசியக்கொடி கிழிந்து தொங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமையான கற்கட்டடம் உள்ளது. இந்த கட்டத்தின் உச்சியில்தான் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.
இந்த கட்டடத்தின் வாசல் வழியாகத்தான், மாவட்ட ஆட்சியர் தனது அலுவலக அறைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், கட்டடத்தின் உச்சியில் உள்ள தேசியக்கொடி கிழிந்து காணப்பட்டது. கிழிந்த நிலையில் தேசியக்கொடி அரை கம்பத்தில் தொங்கியிருந்தது.
தேசிய கொடி, கிழிந்த காணப்பட்டதைக் கவனித்த பத்திரிகையாளர்கள் சிலர், காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பில் இருந்த பெண் போலீசார் ஒருவர் கொடியைச் சரிசெய்ய ஊழியர்களிடம் கூறினார். இதன் பிறகு, கட்டடத்துக்கு மேலே சென்று ஊழியர்கள், கொடியை சரி செய்து மீண்டும் பறக்கவிட்டனர்.
மனு நாளான இன்று, அதிகமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால், தேசியக் கொடி கிழிந்து தொங்கியதை அதிகாரிகள் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. தேசியக்கொடி கிழிந்து அரைக் கம்பத்தில் பறந்தததால், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
