தேனி மாவட்டம், கம்பம் மெட்டில் முதன் முறையாக சோதனை சாவடி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம், கம்பம் - கம்பம் மெட்டு பகுதியில் தமிழக வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் கேரள சுங்கத்துறையினர் சோதனைச் சாவடி அமைக்க முயன்றனர். அதனைத் தடுத்த தமிழக வனத்துறையினர் தாக்கப்பட்டனர்.

இந்த பிரச்சனை தொடர்பாக, தேனி, இடுக்கி மாவட்ட உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில், முறையான ஆவணங்களுடன் தமிழக - கேரள எல்லைப் பகுதியை இரு மாநில அதிகாரிகளும் கூட்டாக நில அளவீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தேனி மாவட்டம், கம்பம் மெட்டில் முதன் முறையாக சோதனை சாவடி அமைக்க தமிழக அரசு அமைக்கப்பட்டது.

இந்த சோதனை சாவடியை, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திறந்து வைக்க சென்றிருந்தார்.

இதையடுத்து,  சோதனை சாவடியை திறக்க முடியாமல் ஆர்.பி. உதயகுமார் திரும்பினார். அவருடன் சில அமைச்சர்களும் திரும்பினர்.

கேரள எதிர்ப்பு காரணமாக அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கேரள - தமிழக எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.