இஸ்லாமியர்களின்  முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்றாகும். ரமலான் மாதத்தில் கொண்டாடப்படும் இப்பண்டிகை சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும்.. கடந்த ஒரு மாத காலமாக இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர்.

இந்நிலையில்  இன்று மாலை பிறை தெரிந்ததால்  தமிழகம், புதுச்சேரியில்  ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும்  என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.  

தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை,லால்பேட்டையில் பிறை தென்பட்டது என்று தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார். இதையடுத்து நாளை இஸ்லாமியர்கள் புனித ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ளனர்.