together well stop ongc work in keramangalam - Seeman

தஞ்சாவூர்

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடங்கயிருக்கும் பணியை அனைவரும் ஒன்றிணைந்து தடுப்போம் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்துப் போராடிய மக்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் பதித்துள்ளது.

இந்தக் குழாய்களை சீரமைக்கும் பணி கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைப்பெற்றது. இதனை அப்பகுதி மக்கள் எதிர்த்துப் போராடினர்.

இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து போராடிய மக்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

அப்போது, “இந்த நாட்டை ஒருசிலர் கூறுபோட்டு விற்க பார்க்கின்றனர்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாங்கித் தருவது போல நம்மை ஏமாற்றுகின்றனர்.

மீத்தேன் திட்டத்தால் நம் நாடே பாலைவனமாக மாறிவிடும்.

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடங்க இருக்கும் பணியை அனைவரும் ஒன்றிணைந்து தடுப்போம்” என்று அவர் கூறினார்.