Asianet News TamilAsianet News Tamil

அச்சச்சோ.!! தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை !

Weather Update Tamilnadu : தெற்கு அந்தமான் கடல் பகுதி  மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Today tamilnadu weather report april 30
Author
Tamilnadu, First Published Apr 30, 2022, 5:00 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மே 4ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதி  மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 5-ஆம் தேதி அந்த பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

Today tamilnadu weather report april 30

தொடர்ந்து 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று வரும் 6ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Today tamilnadu weather report april 30

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் (ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி), சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஷாக்கான ஸ்டாலின்..! அதிர்ந்த அதிகாரிகள்..! ஆண்டிப்பட்டியில் நடந்த நள்ளிரவு சம்பவம் - வீடியோ

இதையும் படிங்க : இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!

Follow Us:
Download App:
  • android
  • ios