Tamilnadu Rains : தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
இன்று மழைக்கு வாய்ப்பு :
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,இன்று தென் தமிழகம்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை :
அடுத்த 24 மணிநேரத்திற்கு, சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 32°C மற்றும் 25°C ஆக இருக்கும். அடுத்த 48 மணிநேரத்திற்கு: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்.
அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்சம் வெப்பநிலை முறையே 32°C மற்றும் 24°C ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகம்,புதுவை,காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிக மழை :
24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. மதுக்கூர், சிதம்பரம், 4; அதிராம்பட்டினம், நெய்வாசல், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி, 3; பரங்கிப்பேட்டை, ஒரத்தநாடு, 2; மாமல்லபுரம், பெருஞ்சாணி அணை, திருக்கழுங்குன்றம், 1 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
