கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் இன்று  கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் பொது மக்கள் மிகுந்த சிரமம் அடைந்ததனர்.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவாசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்தனர்.

ஆனால் தென்மாவட்டங்களில் மழை சொல்லிகொள்ளும்படி பெய்யவில்லை. லேசாகத்தான் பெய்தது. இந்தநிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் ஒரு சில இடங்களில் ஓரளவுக்கு மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரி முதல் லட்சத்தீவு வரை புதய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் இன்று கன மழைபெய்ய வாய்ப்பு உள்ளது என  சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிட பேசும்போது , ஒரு குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது குமரிக்கடல் முதல் லட்சத்தீவு வரை பரவி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும்  குறிப்பாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று பகலில் வேப்பேரி, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைபெய்தது. தம்ழகத்தில் அதிக அளவாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.