today morning 10 Am 10th result will published
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு அல்லது பெற்றோர்களின் செல்போன் எண்களுக்கு அவரவர் தேர்வு முடிவு குறுஞ்செய்தியாக அனுப்பப்படவுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 8 முதல் 30 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 12,187 பள்ளிகளிலிருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படுகிறது.
மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் மே 19-ஆம் தேதி காலையில் இருந்து, மே 22-ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான மறுகூட்டலுக்கு 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 25-ம் தேதி முதல் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் மாத இறுதில் நடைபெறவுள்ளது.
