today is narendira modi birthday

பிரதமர் நரேந்திர மோடியின் 67-வது பிறந்ததினத்தை நாடு முழுவதும் பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்த மோடி, இன்று தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் பல நகரங்களில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மோடியின் பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள இந்தியா கேட், மும்பையில் உள்ள ஜுஹூ கடற்கரை உள்ளிட்ட 15 சுற்றுலாத் தளங்களில் மத்திய அமைச்சர்கள் மற்றும் ஏராளமான பாஜகவினர் துப்புரவுப் பணியில் ஈடுபட உள்ளனர்.

பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் இரண்டாவது பெரிய மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய அணையான சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.