கத்திரி வெயிலில் இருப்பதை போன்று பல மாவட்டங்களிலும் வெயில் 100 டிகிரியை தொட்டது. இதனால் மக்கள் இந்த ஆண்டு கோடை காலத்தை நினைத்து மிகவும் அச்சத்தில் இருந்து வந்தனர். 

வானிலை மையம் :

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கத்திரி வெயிலில் இருப்பதை போன்று பல மாவட்டங்களிலும் வெயில் 100 டிகிரியை தொட்டது. இதனால் மக்கள் இந்த ஆண்டு கோடை காலத்தை நினைத்து மிகவும் அச்சத்தில் இருந்து வந்தனர். 

ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. இந்நிலையில் இன்றைய மழை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதாவது கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் வானம் 2 நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சைக்கிள் வேணுமா உனக்கு..? சைக்கிள் கேட்ட 9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம் !