சைக்கிள் கேட்டதற்காக ஒன்பது வயது மகளையும், மனைவியையும் கொடூரமாக தாக்கியுள்ளார் தந்தை.

சைக்கிள் கேட்ட மகள் :

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம், தாமரசேரி பரப்பன்பொயிலை சேர்ந்த ஷாஜி என்பவர் தனது மனைவி பினியா மற்றும் மகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஷாஜி மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார். பலத்த காயம் அடைந்த குழந்தையும் தாயும் தற்போது மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நலக் குழு அறிக்கை கோரியுள்ளது. இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளது. மகள் சைக்கிள் கேட்டபோது, ​​முதலில் தன்னால் வாங்கித் தர முடியவில்லை என்று கூறினார். பின்னர் மீண்டும் மனைவி மற்றும் மகள் கேட்ட போது, சண்டை வந்தது. மீண்டும் கேட்டபோது கன்னத்தில் அறைந்து அம்மாவின் குடும்பத்தாரிடம் கேட்கச் சொல்லியதோடு, வீட்டை விட்டு வெளியே போகாவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

பரபரப்பு சம்பவம் :

மாலையில் வீடு திரும்பிய ஷாஜி, மகளின் உடலில் கொதிக்கும் நீரை ஊற்றியதோடு, கையையும் உடைத்துள்ளார். மேலும் மனைவியின் முகத்திலும், உடலின் மற்ற பகுதிகளிலும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த தாயும், மகளும், முதலில் தாமரசேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

இதையும் படிங்க : Pakistan : நள்ளிரவில் கவிழ்ந்த இம்ரான்கான் அரசு..நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நடந்த திடீர் ‘ட்விஸ்ட்’ !!