Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் இன்று 4862 பேர் ..!எகிறியது கொரோனா..சென்னையில் மட்டும் 2481 பேர்..

தமிழத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5000ஐ நெருங்கியுள்ளது. நேற்று பாதிப்பை ஒப்பிடும் போது தமிழகத்தில் ஒரே நாளில் தினசரி பாதிப்பு எண்ணிகையில் 2,000க்கு மேல் அதிகரித்துள்ளது.
 

Today corona case report
Author
Tamilnádu, First Published Jan 5, 2022, 8:53 PM IST

தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 2,731 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,131 அதிகரித்து 4,862 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 2481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 1489 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 4824 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 38 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 9 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,814 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 4 பேரும் தனியார் மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றிலிருந்து 688 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 674 பேர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 290 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 596 பேருக்கு  கொரோனா உறுதியாகி அதிகரித்துள்ளது. அதே போல் கோவையில் 120  ஆக இருந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு 259 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 147 ஆக இருந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பானது 209 ஆக உயர்ந்துள்ளது. வேலூரில் 105 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 184 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 54 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 127 பேருக்கும்  ஏற்பட்டுள்ளது .தூத்துக்குடியில் 42 ஆக இருந்த கொரோனா 123 ஆக அதிகரித்துள்ளது.கன்னியாகுமரியில் 97 பேருக்கும், திருப்பூரில் 80 பேருக்கும் சேலத்தில் 75 பேருக்கும் ராணிபேட்டையில் 68 பேருக்கும் மதுரையில் 52 பேருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 
 
அரியலூரில் ,திண்டுக்கல், தருமபுரி ,தேனி, திருப்பத்தூர், தென்காசி,மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒற்றை இலக்கங்களில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா தினசரி பாதிப்பு உள்ளது. அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 பேருக்கு மட்டும் இன்று கொரோனா தொற்று உறுதியாகி, மிக குறைந்த பாதிப்பு பதிவான மாவட்டமாக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios