Asianet News TamilAsianet News Tamil

காவல்துறையில் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு.. தேதி இன்று அறிவிப்பு.. விண்ணபிப்பது எப்படி ..?

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 3,552 பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பை இன்று வெளியிடுகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகிறது. 
 

TNUSRB Police Constable Recruitment 2022
Author
Tamilnádu, First Published Jun 30, 2022, 11:08 AM IST

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 3,552 பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பை இன்று வெளியிடுகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகிறது. www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும். இதையடுத்து வரும் 7ம் தேதி முதல் இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க:ரேஷன் கார்டுதாரர்கள் இதை நாளைக்குள் செய்ய வேண்டும்... தவறினால் அரசு உதவிகளை பெற முடியாது!!

மேலும் படிக்க:ஓய்வுபெறும் ஆசிரியர்களை மறுநியமனம் செய்ய அனுமதி... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

மேலும் படிக்க:டிஎன்பிஎஸ்இ குரூப் 1 முதன்மை தேர்வு முடிவு வெளியானது.. எப்படி பார்ப்பது..? நேர்காணல் எப்போது..? முழு தகவல்

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம்,  பொது தேர்வு 2022க்கான 3,552 இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) இரண்டாம் நிலை சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கான அறிக்கை வெளியிடப்படுகிறது.
 
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணையவழியில் ஜூலை 7 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். வாரியம் முதல் முறையாக தமிழ் மொழித்தகுதி தேர்வை அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி காவலர் பொது தேர்வு 2022 நடத்துகிறது.

வாரியத்தில் வரும் 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை கட்டுப்பாட்டு அறையில் ‘உதவி மையம்’ வாரத்தின் 7 நாட்களும் செயல்படும். இதேபோன்று உதவி மையங்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும், அலுவலக பணி நேரத்தில் செயல்படும். 

இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள், தெளிவுகளுக்கு உதவி மையத்தின் சேவைகளை பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தேர்வுக்கான தகுதி அளவுகோல், தேர்வு செய்முறை மற்றும் எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம் போன்ற கூடுதல் விவரங்கள் வாரிய இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சந்தேகமுள்ள நபர்கள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறை எண்கள்: 044- 40016200, 044-28413658, 9499008445, 9176243899, 978903725ல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios