ஓய்வுபெறும் ஆசிரியர்களை மறுநியமனம் செய்ய அனுமதி... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!
ஓய்வுபெறும் ஆசிரியர்கள் நிபந்தனையின் பேரில் மறுநியமனம் செய்ய அனுமதி அளித்து தமிழக கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
ஓய்வுபெறும் ஆசிரியர்கள் நிபந்தனையின் பேரில் மறுநியமனம் செய்ய அனுமதி அளித்து தமிழக கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை ஓய்வுபெறும் ஆசிரியர்கள் நிபந்தனையின் பேரில் மறுநியமனம் செய்ய அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்இ குரூப் 1 முதன்மை தேர்வு முடிவு வெளியானது.. எப்படி பார்ப்பது..? நேர்காணல் எப்போது..? முழு தகவல்
இதுக்குறித்த தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிப்புரியும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையே வயது முதிர்வால் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை ( Upto the end of Academic Session ) தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் ஆணை வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்.. வாட்ஸ் அப்- யில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி டார்ச்சர்.. அரசுப்பள்ளி ஆசிரியர் கைது
இதன்மூலம், கல்வியாண்டின் இடையே வயது முதிர்வால் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் நிபந்தனையின் பேரில் மறுநியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மறுநியமனம் செய்ய ஆசிரியர்களின் பண்பு, நடத்தை திருப்திகரமாக இருக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. மேலும் தொடர்ந்து பணிபுரியும் வகையில் ஆசிரியர்கள் உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும் எனவும் நிபந்தனையில் அரசு தெரிவித்துள்ளது.