டிஎன்பிஎஸ்இ குரூப் 1 முதன்மை தேர்வு முடிவு வெளியானது.. எப்படி பார்ப்பது..? நேர்காணல் எப்போது..? முழு தகவல்

டிஎன்பிஎஸ்இ குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் தற்போது டிஎன்பிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Group 1 Exam Results 2022 annouced official

டிஎன்பிஎஸ்இ குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் தற்போது டிஎன்பிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை குரூப் 1 முதன்மை தேர்வுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி, இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் ஜூலை 13,14,15 ஆகிய தேதிகளில் நேர்காணல் தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:அலர்ட் !! இனி பள்ளி வாகனங்களில் சிசிடிவி, சென்சார் கருவி கட்டாயம்.. பள்ளிக்கல்வித் துறை போட்ட புதிய உத்தரவு..

மேலும் படிக்க:Suriya : தம்பிக்கு பாராட்டுக்கள்.! நடிகர் சூர்யாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா ?

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு பதிவெண்கள் டிஎன்பிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx  வெளியாகியுள்ளது. இந்நிலையில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்  சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்இ அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இதுக்குறித்து மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகவல்கள் அனுப்பப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios