மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு அ.தி.மு.க. பெண் வேட்பாளர் அன்னதாட்சி மரணமடைந்தார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியான முதலே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளன.
கொரோனா அச்சம் காரணமாக, மாநில தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில், வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள 20 நபர்கள் வரை அனுமதி, திறந்தவெளி மைதானங்களில் 1,000 நபர்கள் வரையும் அல்லது மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 50% என இதில் எது குறைவான எண்ணிக்கையோ அந்த அளவில் பரப்புரை கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளுகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு அ.தி.மு.க. பெண் வேட்பாளர் அன்னதாட்சி மரணமடைந்தார்.மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு அ.தி.மு.க. பெண் வேட்பாளர் அன்னதாட்சி மரணமடைந்தார்.இந்நிலையில் அங்கு வரும் 19 ம் தேதி நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை தருமபுரம் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி அன்னதாட்சி(வயது 64). இவர், மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு உறுப்பினர் பதவிக்காக அ.தி.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
நேற்று காலை அன்னதாட்சி உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்துள்ளார். மதியம் உணவு அருந்திய அவர் சின்னமாரியம்மன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டார். பூஜையில் அன்னதாட்சி இருந்தபோது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 19 வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
