TNPSC Revised Annual planner 2022-2023: டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம்; தேர்வர்கள் மகிழ்ச்சி
அண்மையில் வெளியிடப்பட்டிருந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வருடாந்திர அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் வெளியிடப்பட்டுள்ளதால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது (TNPSC) ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அடுத்த ஆண்டில் ஆணையம் சார்பில் மேற்கொள்ளப்படும் தேர்வு விவரத்தை வெளியிடுவது வழக்கம். அதன்படி அண்மையில் 2023ம் ஆண்டுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த அட்டவனையில் குரூப் 1, குரூப் 2 தேர்வுகள் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
8வது படித்தவர்களுக்கு 63,000 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை
இதனால் குரூப் 1, 2 தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வந்த தேர்வர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,750 என்ற அளவிலேயே இருந்தது. இந்நிலையில் அரசு பணியாளர் தேர்வாணையமானது தற்போது பழைய அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.
JEE Main 2023 exam date: சிபிஎஸ்இ மாணவர்களுக்காக ஜேஇஇ தேர்வு தேதி மாற்றம்?
புதிதாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. அதன்படி குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 2023ம் ஆண்டு வெளியிடப்படும் எனவும், முதல்நிலைத் தேர்வு நவம்பர் மாதமும், முதன்மைத் தேர்வு ஜூலை 2024லும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2024 மார்ச் மாதமும், முதன்மைத் தேர்வு முடிவுகள் 2024 நவம்பர் மாதமும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.