JEE Main 2023 exam date: சிபிஎஸ்இ மாணவர்களுக்காக ஜேஇஇ தேர்வு தேதி மாற்றம்?
ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே நேரத்தில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பொதுத் தேர்க்கான செய்முறை தேர்வுகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் முதன்மை தேர்வுக்கான தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கான அட்டவணை மற்றும் தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகளை தேசிய தேர்வு முகமை அண்மையில் வெளியிட்டது. அதன்படி இந்த ஆண்டு ஐஐஐடி, என்ஐடி, சிஎஃப்டிஐ உள்ளிட்டவற்றில் சேர்க்கை பெறுவதற்கான அளவுகோலில், மாணவர்கள் தகங்களது 12ம் வகுப்புத் தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதை கூடுதல் தகுதியாக இணைத்துள்ளது.
சென்னை அண்ணா மேம்பாலத்தின் 50 ஆண்டு விழா..! 9 கோடியில் சீரமைப்பு- எ.வ வேலு தகவல்
ஏற்கனவே இந்த கட்டுப்பாடு நடைமுறையில் இருந்த நிலையில், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இதில் தளர்வு அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் முதல்நிலைத் தேர்வு வருகின்ற ஜனவரி 24ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேதியில் தான் நடைபெற உள்ளது. இதனால் நடப்பாண்டில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பொறியியல் படிக்க வேண்டும் என்ற கனவில் பல மாணவர்கள் உள்ள நிலையில் அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு ஜேஇஇ முதல்நிலைத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நடப்பாண்டில் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வை எழுத முடியாத பட்சத்தில் மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கான ஜேஇஇ தேர்வு வரை காத்திருக்க நேரிடும். இதனால் மாணவர்களுக்கு சுமார் ஓராண்டு வீணாகக் கூடும் என்பதால் முதல் நிலைத் தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.