சென்னை அண்ணா மேம்பாலத்தின் 50 ஆண்டு விழா..! 9 கோடியில் சீரமைப்பு- எ.வ வேலு தகவல்
சென்னை அண்ணா மேம்பாலத்தின் 50ஆம் ஆண்டு விழாவையோட்டி 8.85 கோடி ரூபாயில் புனரமைக்கும் வருகின்ற மார்ச் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
அண்ணா மேம்பாலம் 50வது ஆண்டு விழா
சென்னை அண்ணாசாலையில் ஜெமினி சந்திப்பில் உள்ள அண்ணா மேம்பாலம் புனரமைப்பு பணிகளை பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா மேம்பாலம் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 1971-ம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. மேம்பால பணிகள் முடிவடைந்து 1.7.1973-ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. அந்நாளில் சென்னையில் கட்டப்பட்ட மிக 600 மீட்டர் நீளம் கொண்ட மேம்பாலம். குதிரைப் பந்தயத்தை ரத்து செய்ததன் நினைவாக மேம்பாலத்தின் அருகில் குதிரை வீரன் சிலை நிறுவினார்.
8 கோடியில் சீரமைப்பு
இந்தநிலையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்த மேம்பாலத்தை புனரமைக்கும் வகையில் ரூ8.85 கோடி மதிப்பில் CRIDP 2021 நிதி ஒதுக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே பொலிவூட்டும் வகையில் பசுமையாக செடி வகைகள் அமைக்கவும் பொது மக்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். இப்பணிகள் வரும் மார்ச் – 2023க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இந்த ஆய்வின் போது ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உடன் இருந்தார்.
இதையும் படியுங்கள்
விரைவில் திமுகவில் இணைய உள்ள 3000 அதிமுகவினர்… கோவை செல்வராஜ் பரபரப்பு தகவல்!!